Skip to content
Home » ரூ.400 கோடியில் கல்லணை கால்வாய் சீரமைப்பு……பட்ஜெட்டில் அறிவிப்பு

ரூ.400 கோடியில் கல்லணை கால்வாய் சீரமைப்பு……பட்ஜெட்டில் அறிவிப்பு

நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  தாக்கல் செய்த 2024-25 பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

திருச்சியில் 6.3 லட்சம் சதுர அடியில்  ரூ. 350 கோடியிலும், மதுரையில்ரூ.354 கோடியிலும் டைடல்  பூங்காங்கள் அமைக்கப்படும். 3 ஆயிரம் புதிய பஸ்கள் கொள்முதல் செய்யப்படும். சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை  மெட்ரோ ரயில் திட்டத்திற்கு   அறிக்கை தயாரிக்கப்படுகிறது.  திட்ட அறிக்கை மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.  ஜெர்மனி நாட்டின் பங்களிப்புடன் 500 மினி பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.  சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை  தமிழக அரசு வலியுறுத்துகிறது.

மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தொடங்கப்படும். 2030க்குள் 100 மி. யூனிட்  மின் உற்பத்தி செய்யப்படும்.  விருதுநகர், சேலத்தில் ஜவுளிப்பூங்கா ஏற்படுத்தப்படும்.  சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நடப்பு ஆண்டில் ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். சென்னை பிராட்வே  பஸ்நிலையம் மேம்படுத்தப்படும்.1000 ஆண்டுகள் பழமையான கோயில்கள் திருப்பணிக்கு நிதி ஒதுக்கப்படுகிறது.  அனைத்து மாநகராட்சிகளிலும் முக்கியமான ஆயிரம் இடங்களில் வைபை  வசதி செய்யப்படும்.

கல்லணை கால்வாய் ரூ.400 கோடியில் சீரமைக்கப்படும். இதன் மூலம்  தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில்  நெல்  சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும். ராமநாதபுரம், காயல்பட்டினம் உள்பட தமிழ்நாட்டின் கடற்கரைகளை மேம்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடு. கோயில்கள் திருப்பணிக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு. ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு பயிற்சிக்கு ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!