அதிராம்பட்டினம் இன்று லயன்ஸ் சங்கம் துபாய் கோல்ட், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ஷிபா ஹாஸ்பிடல் இனைந்து நடத்திய மாபெரும் கண் சிகிச்சை முகாம், ஷிபா மருத்துவமனையில் காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணிவரை நடைபெற்றது. முகாமை தலைவர் உதயகுமார் தலைமை ஏற்று நடத்தினார். முகாமை வட்டார தலைவர் பேரா. முருகானந்தம் துவைக்கி வைத்தார். பேரா. கணபதி, அஹம்மது ஜலீல் ஆகியோர் முகாமை

ஒருங்கிணைத்தனர். முகாம் ஏற்படுகளை செயலாளர் இம்தியாஸ் மற்றும் பொருளாளர் புஷ்பராஜ் கவனித்துக்கொண்டனர். செந்தமிழ்செல்வன், அஹமத், சாகுல், ஆரிஃப் ஆகியோர் முகாமை சரி செய்தனர். பேரா. முகம்மது அப்துல்காதிர், செல்வராஜன், அருண், ஆறுமுகசாமி ஆகியோர் மேற்பார்வை செய்தனர். அபூபக்கர் ஆகியோறும் கலந்துகொண்டனர். வருகைத்தந்த நபர்கள் 205.பேர். இதில் 80 பேர் IOL சிகிச்சைக்கு இன்று மதியம் 2.00 மணிக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு இரண்டு பேருந்துக்களில் பத்தியமாக அதிரை லயன்ஸ் நண்பர்களால் அனுப்பிவைக்கப்பட்டனர்.
