கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கூலி தொழிலாளியின் 4 வயது மகளை 4 நாட்களுக்கு முன்பு
புத்தர் நகரில் வசித்து வரும் தங்கராசு மகன் விஜய் (எ) மாணிக்கம் (31) என்பவரிடம்
4 வயது சிறுமியை புத்தர் நகரில் உள்ள பாட்டி வீட்டில் விடும்படி கூறியுள்ளார்.
இதனை அடுத்து இருசக்கர வாகனத்தில் மாணிக்கம் 4 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாட்டி வீட்டில் விடாமல் புத்தர் நகரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு

வைத்து 4 வயது சிறுமியை மாணிக்கம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பாட்டியிடம் அழுது கொண்டே நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். தனது பேத்தியை சீரழித்ததை கேட்டு வேதனை அடைந்த பாட்டி அரிவாளுடன் மாணிக்கத்தை கண்காணித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று மதியம் தேவதானம் பகுதியில் கட்டிட வேலை செய்து செய்து கொண்டிருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் நாங்கள் சென்று பார்த்தபோது மாணிக்கம் அங்கு இல்லை.
இதனை அடுத்து அவரை தேடி திரிந்த போது குளித்தலை பகுதியில் நின்று கொண்டிருந்த மாணிக்கத்தை பிடித்து காவல் நிலையத்திற்கு ஒப்படைக்க சாலையில் இழுத்து வந்துள்ளார்.
மேலும்தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஓட,ஓட விரட்டி சரமாரியாக வெட்டி

காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார்.
10 க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் வெட்டு விழுந்ததால் மாணிக்கம் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள்
ஓடி வந்தனர்.
அவ்வாறு பாதி வழியில் செல்லும்போது தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சிறுமியின் பாட்டியை பிடித்து அரிவாளை பறிமுதல் செய்தனர்.
பின்னர் சிறுமியின் பாட்டியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் அங்கு அவரை விசாரணை செய்து வருகின்றனர்.
படுகாயம் அடைந்த மாணிக்கம் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
4 வயது சிறுமியை 31 வயது இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்த இந்த சம்பவம் குளித்தலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
