அரியானா மற்றும் ஜம்மு – காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. 90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5ம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 8ம் தேதி வாக்குகள் எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்று பிற்பகல் 3 மணிக்கு முடிவடைகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும் என்றும், வரும் 16ம் தேதிக்குள் வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம் என்றும் அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியாகும் என்றும் தேர்தல் அதிகாரிகள் கூறி உள்ளனர்.ஜூலானா தொகுதியில் ஒலிம்பிக் மல்யுத்த வீராங்களை வினேஷ் போகத் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக வேட்பாளராக முன்னாள் விமானப்படை கேப்டன் யோகேஷ் பைராகி நிறுத்தப்பட்டுள்ளார்.
