Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – தலைமை ஆசிரியர் கைது

அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டம் மிசாமாரி நகரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த கனக் சந்திர பொர்டொலொய், தனது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 23-ம் தேதி, 9-ம் வகுப்பு பயிலும் மாணவிக்குத் தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமை ஆசிரியர் கனக் சந்திராவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!