Skip to content
Home » வாக்கிங் சென்ற தலைமை ஆசிரியையிடம் 7பவுன் தங்க நகை பறித்த நபர் கைது…

வாக்கிங் சென்ற தலைமை ஆசிரியையிடம் 7பவுன் தங்க நகை பறித்த நபர் கைது…

  • by Senthil

காரைக்கால் ரயில் நிலைய நடைபாதையில், கடந்த 7-ந் தேதி நடைபயிற்சி மேற்கொண்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியை கழுத்திலிருந்த 7 பவுன் தங்க நகையை கொள்ளை அடித்த கேரளாவைச் சேர்ந்த நபரை காரைக்கால் நகர போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் சிவாஜிநகர் முதல் தெருவைச்சேர்ந்தவர் தனலட்சுமி(வயது54). இவர், காரைக்கால் புதுத்துறை ஜி.எம்.எஸ் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தினந்தோறும் காலை, காரைக்கால் கிராம்புத்தோட்டம், பாரதியார் வீதியைச்சேர்ந்த தோழி ஜெயந்தி(63) என்பவருடன் காரைக்கால் ரயில்நிலைய நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்தவகையில், கடந்த 7-ந் தேதி காலை, வழக்கம் போல், தோழிகள் இருவரும் ரயில்நிலைய நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொண்டனர். அப்போது, 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க மர்மநபர் ஒருவர், நடைபாதையை ஒட்டிய இருக்கை ஒன்றில் அமர்ந்தும், உடற்பயிற்சிகள் செய்தும், தோழிகள் இருவரும் நடைபயிற்சி மேற்கொள்வதை உண்ணிப்பாக கண்காணித்துள்ளார். பிறகு திடீரென மறைந்திருந்து, தோழிகள் இருவரும் வந்தவுடன், ஜெயந்தி என்ற மூதாட்டியின் பின்புறம் சென்று, அவரை பிடித்து இழுத்து, தன்பக்கம் சாய்த்து, அவரது முகத்தில் வலுகட்டாயமாக எதையோ பூசியுள்ளார்.

இதை பார்த்த தனலட்சுமி, மர்மநபரை பிடித்து இழுக்கும் போது, மர்ம நபர், தனலட்சுமி கழுத்திலிருந்த சுமார் 7 பவுன் நங்க தங்கையை பறித்துகொண்டு, கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தோழிகள் இருவரும் சப்தம் போட்டதையடுத்து, அங்கு நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த மற்ற நபர்கள் மர்ம நபரை விரட்டி சென்றனர். அதற்குள் அவன் தப்பி ஓடிவிட்டான். இது குறித்து, தனலட்சுமி, காரைக்கால் நகர போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து,

அங்குள்ள சிசி கேமாரா உதவியுடன் மர்ம நபரை தேடி வந்தனர். அதன் ஒரு பகுதியாக அங்கு கிடைத்த சிசி கேமரா பதிவில், குறிப்பிட்ட நேரத்தில் மர்ம நபர் ஒருவர் முதுகில் பேக்குடன் தப்பி ஓடுவது தெரியவந்தது. அந்த புகைப்படத்துடன் பல குற்றவாளிகளை ஒப்பிட்டு தேடி வந்த நிலையில் மர்ம நபர் கும்பகோணத்தில் இருப்பதாக தெரியவந்தது.

தொடர்ந்து காரைக்கால் நகர போலீசார் கும்பகோணம் விரைந்து சென்று அங்கு தேடிய பொழுது கிடைக்கவில்லை. தொடர் விசாரணையில் அவர் கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கும் அவர் இல்லாததால், கடந்த பல நாட்களாக அங்கேயே முகாமிட்டு இருந்த பொழுது, மர்ம நபர் நேற்று முன்தினம் போலீசாரிடம் சிக்கினான். அவனை கைது செய்த போலீசார் நேற்று காரைக்கால் கொண்டு வந்தனர். தொடர் விசாரணையில் கேரள மாநிலம் ஆலப்புழா பகுதி சேர்ந்த செல்லப்பன் மகன் மனோஜ் (வயது 46) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 7 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். கொலை சம்பவம் நடந்து, 15 நாட்களில் திருடனை கைது செய்த போலீசாரை, மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பரெண்ட் மணிஷ், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!