Skip to content
Home » தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்…. கோரிக்கை….

தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்…. கோரிக்கை….

திருச்சி, மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கூட்டமைப்புகள் ஒருங்கிணைந்து உயர் மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதில்  திரு.எம்.செந்தில்குமார் மாநிலத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் திரு. ஆர். வெங்கடேசன் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் திரு.பூ.இரமேஷ் தலைவர், மற்றும் திரு. குகநாதன் பொதுச் செயலாளர் ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் கூட்டமைப்பு மேலும் கௌரவ தலைவர் திரு.ப.அம்பிகாபதி ஆகியோர் கலந்துக்கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள் பள்ளிக் கல்வித்துறையோடு இணைக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை 2023-24ல் இடம்பெற்ற அறிவிப்பிற்காக தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் சங்கங்களின் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அம்பேத்கர் முதுகலை பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – மாநில தலைவர் செந்தில்குமார் பேசியது.. கடந்த நாற்பது ஆண்டுகளாக நம் துறைப்பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்க வேண்டும் எறும் நோக்கில் இது குறித்த பல்வேறு தளங்களில் எழுதியும் பேசியும் கருத்துருவாக்கத்தை தனது மாற்றம் தேவை” என்ற கட்டுரை மூலம்’ பரப்புரை செய்த இச்சங்கத்தின் கௌரவ தலைவர் திரு ப.அம்பிகாபதி தலைமை ஆசிரியர் (பணி நிறைவு) நன்றி  உள்ளிட்ட 4 தீரமானம்  நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர்களின் கோரிக்கை பின்வருமாறு.. 

1. கடந்த இரண்டு ஆண்டுகளாக மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு பதவி உயர்வு வழங்காமல் காலியாக உள்ள 23 மேல்நிலைப் பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வினை இக்கல்வியாண்டிற்குள் (2022-23) இத்துறையில் தகுதியுடைய முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களைக் கொண்டு நிரப்பிட அரசுக்குக் கோரிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பிற்கு முன்பாக அனைத்து நிலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திடவும் கோரிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.

2 பள்ளிக் கல்வித் துறையுடன் புதிதாக இணைக்கப்படும் பிற துறைப் பள்ளிகளை தனி அலகாகக் கருதாது முழுமையாக தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளை தொடக்கக் கல்வித் துறையின் கீழும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பாள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையின் கீழும் எந்தவித பாகுபாடும் காட்டாது இணைத்துவிட கோரிக்கை வைக்கப்படுகிறது.

3. இத்துறைப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கும் பொழுது இப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரையும் அவர்கள் நியமன நாள் அல்லது ஆசிரியர் தேர்வு வாரிய தர எணி (TRB Rank) அடிப்படையில் எந்தவித பாதிப்பும் இன்றி ஒருங்கிணைந்த மூதுரிமை பட்டியல் (Seniority list) தயாரித்து அடுத்த பதவி உயர்வுகள் பெறுவதை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!