Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் ஹெல்த் வாக் நடைபாதை ……3 அமைச்சர்கள் ஆய்வு

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும்  விரைவில் தொடங்கப்படவுள்ள  ஹெல்த் வாக்  திட்டத்தின் கீழ், புதுக்கோட்டையில்  8 கி.மீ. தூர நடைபாதையை தேர்வு செய்யும் பணி இன்று நடந்தது.  அமைச்சர்கள் ரகுபதி, மா.சுப்பிரமணியன், மெய்யநாதன்  ஆகியோர் இன்று காலை   புதுக்கோட்டை   திலகர் திடலிலிருந்து, மாலையீடு, விளாக்குடி பேருந்து நிறுத்தம் வரையில்  நடந்து  சென்று  நடைபாதையை  ஆய்வு  செய்தனர்.

இந்த ஆய்வின்போது  மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , முன்னாள் அரசு வழக்கறிஞர் .கே.கே.செல்லபாண்டியன் , மாவட்ட வருவாய் அலுவலர் .மா.செல்வி, நகர்மன்றத் தலைவர் .திலகவதி செந்தில், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!