வடகிழக்கு பருவமழையின் துவக்கமாக தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் இன்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. செனை்ன வானிலை மையம் தமிழகத்தில் இன்று(அக்.,15) திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ விடுத்துள்ளது.
