Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை..மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலி..

சென்னையில் நேற்றிரவு முதல் அதிகாலை வரை கனமழை கொட்டி தீர்த்தது.  குறிப்பாக, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தை வெளி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், செனாய் நகர், அமைந்தகரை, முகப்பேர், பல்லாவரம், சென்னை விமான நிலையம், பம்பல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் த தாழ்வான இடங்களில் மழைநீர் புகுந்தது. கண்ணகி நகரில் தேங்கியிருந்த மழை நீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் வரலட்சுமி உயிரிழந்தார். கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழைப்பொழிவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:

* பாரிஸ்- 168.9

* மடிப்பாக்கம்- 148.2

* கொரட்டூர்-142.8

* நெற்குன்றம்- 138.6

* நாராயணபுரம் ஏரி- 124.8

* அம்பத்தூர்- 112.5

* வளசரவாக்கம்- 111.6

* ஒக்கியம் துரைப்பாக்கம் – 108.3

* மேடவாக்கம்- 105.3
* பள்ளிக்கரணை- 104.1

* அய்யம்பாக்கம்-96.9

 

error: Content is protected !!