Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் கனமழை- 31 வீடுகள் இடிந்து சேதம்..


வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் திருச்சியில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று 5வது நாளாக மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்தது.
நேற்று முன்தினம் செய்த மழையினால் திருச்சி மாநகரில் ஆர்.எம். எஸ் காலனி உள்ளிட்ட சில இடங்களில் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்து கொண்டது. இந்த வெள்ள நீரை அகற்றும் பணி 3 நாட்களாக இடைவெளியின்றி நடந்து வருகிறது. நேற்று மழையின் வேகம் சற்று குறைந்ததால் மழைநீர் வடிந்து வருகிறது. லால்குடி அருகே புள்ளம்பாடி வெங்கடாசலபுரம் தெற்கு கிராமத்தில் முத்துக்குமார் என்பவரது ஓட்டு வீட்டின் சுவர் மழையால் இடிந்து விழுந்தது. இதேபோன்று மணப்பாறை அருகே புதுவாடி அடுத்த குமரன் பட்டியில் ராசு என்பவரின் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது

ஏரிகள் நிரம்பின

திருச்சி உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆழத்துடையான் பட்டியில் சின்ன ஏரி, பெரிய ஏரி உள்ளது. இதில் பெரிய ஏரி 218 ஏக்கர் பரப்பளவில் உள்ளது கொல்லிமலை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஆழத்துடையான் பட்டி பெரிய ஏரி நிரம்பி வழிந்து சின்ன ஏரிக்கு தற்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது இதனால் அந்த பகுதியில் உள்ள ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் சாகுபடி செய்யும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. உப்பிலியபுரம் பகுதியில் பெய்த தொடர் மழையால் புளியஞ்சோலை அய்யாற்று பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது இதனால் பி. மேட்டூர் கலிங்கி தடுப்பணை நிரம்பி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
அதே போன்று உப்பிலியபுரம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையினால் வரத்து வாரிகளில் நீர் வரத்து அதிகரித்து கோட்டப்பாளையத்தில் உள்ள ஜம்பேரி ஏரி நேற்று முழுமையாக நிரம்பியது. சுமார் 390 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த ஏரி மூலம் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.
மேலும் கடந்த 24 ஆம் தேதி முதல் பெய்து வரும் மழையினால் 11 குடிசைகள் பகுதி அளவும், ஒரு குடிசை முழுமையாகவும், பத்தொன்பது ஓடு மற்றும் காங்கிரீட் வீடுகள் பகுதி அளவு என மொத்தம் 31 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 7 பசு மாடுகள் ஒரு ஆடு இறந்துள்ளது.

error: Content is protected !!