தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்த நிலையில், தற்போது நாகை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் IMD கணித்துள்ளது. அர்னாப் புயல் எதிரொலியாக சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
