Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கனமழை……திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் உள்பட 36 ரயில்கள் இன்று ரத்து

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.   சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது.  இன்று இரவு வரை மழை நீடிக்கும் என்பதால்  ஆங்காங்கே  மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே  பாதுகாப்பு கருதி தென்னக ரயில்வே  36 ரயில்களை இன்று ரத்து செய்துள்ளது.

திருச்சியில் இருந்து இன்று இரவு சென்னை செல்லும் ராக்போர்ட்  ரயில் ரத்து செய்யப்படுகிறது.  அது போல சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ்,  தூத்துக்குடி செல்லும் முத்து நகர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ் பிரஸ்,  செங்கோட்டை எக்ஸ்பிரஸ், மன்னார்குடி  எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் செல்லும்  எக்ஸ்பிரஸ் என  36 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!