கென்யாவின் லைசபா பகுதியில் உள்ள தேசிய பூங்காவை சுற்றுலா பயணிகள் 6 பேர் உள்பட மொத்தம் 7 பேர் இன்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள ஹெலாக்வா மலைப்பகுதியில் பறந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
