Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவிரி அணைகளை பார்வையிட விஜய்க்கு ஹெலிகாப்டர் வசதி: டி.கே.சிவக்குமார்…

காவிரி அணைகளை பார்வையிட விஜய்க்கு ஹெலிகாப்டர் வசதி

காவிரி நீரை பங்கிடுவதில் கர்நாடகா – தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நிலவி வருகிறது. இந்த பிரச்சினையை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டில்லியில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம்
நடைபெற்றது. இதில், தமிழகம்,கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து 29ம் தேதி முதல் (இன்று) தினமும் 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டது. ஆனால், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிடவில்லை.

இந்நிலையில், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்குமாறு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு முறையீடு செய்ய உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு முறையீடு செய்ய உள்ளது.
கர்நாடகாவில் நீர் தேவை அதிகமாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் சூழ்நிலை தற்போது இல்லை என அம்மாநில அரசு கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான விவகாரமும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை திறப்பது தொடர்பான விவகாரமும் பேசுபொருளாகி இருக்கிறது.

இந்நிலையில் டில்லியில் நேற்று கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது.. ” நீர்ப்பாசன விவகாரம் தொடர்பாக, நேற்று முன்தினம் சிறிதளவு நீரைத் திறந்துவிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது குறித்த விவரங்கள் எங்களுக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.
அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து அமைச்சர் எம்.பி. பாட்டீல் உள்ளிட்ட எங்கள் அமைச்சர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளுடனும் நான் ஆலோசனை நடத்தியுள்ளேன். நாங்கள் மேல்முறையீடு செய்யவுள்ளோம். அதன்பிறகு ஒரு முடிவை எடுப்போம். அந்த நடவடிக்கைக்குப் பிறகு, நான் பெங்களூரு சென்றதும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவேன்.

இதற்கிடையில், சில விஷயங்கள் குறித்து என்னிடம் நேரில் வந்து பேசுவதற்குத் தமிழகத் தரப்பிலிருந்தும் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளரும் எனக்குக் கடிதம் எழுதியுள்ளார். தொலைபேசியிலும் என்னிடம் பேசியுள்ளனர். முதல்வர் விஜய் அவர்களை மரியாதையுடன் நடத்துவதும், அவர்களுக்குச் சேர வேண்டியதை வழங்குவதும் எங்கள் கடமையாகும். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் என்னிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். மேகதாது பகுதி உள்ளிட்ட கர்நாடகாவின் நீர்நிலைகளை பார்வையிட முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டர் தயாராக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

error: Content is protected !!