சென்னை வானகரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பெண்கள் பயன்படுத்தும் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர், அறைக்குச் சென்றபோது கைகழுவும் தொட்டிக்கு அடியில் சிறிய கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தார்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தனியார் நிறுவன மேலாளர் வன்னியராஜை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
