Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒலிம்பிக் ஹாக்கி……. அரை இறுதியில் இந்தியா-ஜெர்மனி இன்று மோதல்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில்  ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் மட்டுமே பெற்றுள்ளன.  பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படப்ட  பல போட்டிகளில் இந்திய வீரர்கள் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று இந்தியா- ஜெர்மனி மோதும்  ஹாக்கி அரையிறுதிப்போட்டி நடக்கிறது.  இந்த போட்டி இரவு 10.30 மணிக்கு நடைபெறும். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று விட்டால் ஹாக்கியில் இந்தியா  தங்கம், அல்லது வெண்கல பதக்கத்தை உறுதி செய்துவிடும்.

இந்தியா பங்கேற்கும் மற்ற போட்டிகள் மற்றும் நேரம்: பகல் 1.30 மணிக்கு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா-சீனா அணிகள் மோதுகின்றன. பகல் 1.50 மணிக்கு நடைபெறும் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் மல்யுத்த போட்டியில் ஜப்பானின் சுசாகி யூ உடன் வினேஷ் போகத் மோதுகிறார். இன்று பிற்பகல் 2.50 மணிக்கு நடைபெறும் மகளிர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கிரண் பாகல் பங்கேற்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!