Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஹாக்கி…தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி ஆஸி., வெற்றி….

15-வது உலகக் கோப்பை ஆக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடக்கிறது. போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான், ‘சி’ பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி, ‘டி’ பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சிறப்பாக ஆடி கோல் அடித்தனர். இறுதியில் ஆட்ட நேர முடிவில் 9-2 என ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!