Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீடு புகுந்து நகை திருடிய 15வயது சிறுவன் கைது… தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை கீழவாசல் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லாவண்யா (  24 ). சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் மாயமானது. அதிர்ச்சியடைந்த லாவண்யா பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்த அவர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் வீடு புகுந்து நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!