கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில், விவசாய நிலத்தில் கட்டப்பட்டு வரும் காம்பவுண்ட் சுவர் அருகே வட மாநில தொழிலாளியின் உடல் புதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கழுத்தில் பெல்ட் இறுக்கப்பட்ட தடயமும், முகத்தில் கல்லால் அடித்து சிதைக்கப்பட்ட நிலையிலும் உடல் காணப்பட்டுள்ளது. சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் கடந்த 36 நாட்களில் இது 11வது கொலை சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் பயங்கரம்… வடமாநில தொழிலாளி கொன்று புதைப்பு
