ஏற்கனவே அதிக போக்குவரத்து நெரிசல் நிறைந்த பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமை செயலகத்தை அமைக்க கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அப்பகுதியில் தலைமை செயலகம் அமைந்தால் சாதகங்களை விட பாதகங்களே அதிகம் என்றும், சாந்தோம் சாலையில் சமாளிக்க முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், இதற்கு தீர்வாக சென்னைக்கு வெளியில் பரந்த இடத்தில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரம் அமைப்பதே ஒரே தீர்வாக இருக்கும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
