Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓட்டலில் ஒயிட் ரைஸ் கேட்டு தகராறு…

கோவை மாவட்டம் சூலூர்நரசிம்ம மில் பகுதியில் தனியார் மெஸ் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சைவம், அசைவம் உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் ஒருவர் தனது இரண்டு நண்பர்களுடன் அந்த ஹோட்டலுக்கு சாப்பிட சென்று உள்ளார். மூவரும் சென்ற நிலையில் ஒருவர் மட்டும் சைவ சாப்பாடு ஆர்டர் செய்த நிலையில் மற்ற இருவரும் ஒரு பிரியாணி வகையை வாங்கி இரண்டு பேர் பங்கிட்டு சாப்பிட்டு உள்ளனர். பிரியாணி சாப்பிட்டு பின் அவர்கள் பின்னர் தங்களுக்கு ஒயிட் ரைஸ் கொடுக்கும்படி கேட்டு உள்ளனர்.

பிரியாணி சாப்பிட்ட பின் ஒயிட் ரைஸ் கேட்டதால் அதற்கு ஒயிட் ரைஸ் கிடையாது என ஹோட்டல் ஊழியர்கள் ஒயிட் ரைஸ் கொடுக்க மறுத்து உள்ளனர்.

இதனால் சிவில் இன்ஜினியருக்கும் ஹோட்டல் பணியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்தது.

இதில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் சிவில் இன்ஜினியர் உடன் வந்த மூன்று பேரும் ஆக்ரோஷமாக தாக்கிக் கொள்ளும் சி.சி.டி.வி காட்சிகள் வைரலானது இரு தரப்பினரும் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சி.சி.டி.வி காட்சிகளை சோதனை செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்த நிலையில் தாங்கள் சமாதானமாக செல்வதாக கூறி இரு தரப்பினரும் புகாரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று வாபஸ் பெற்றனர். அவற்றை கேட்ட ஹோட்டல் ஊழியரை தாக்கிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!