Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீட்டின் கதவை உடைத்து ரூ. 50 ஆயிரம், வௌ்ளி கொலுசு கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து ரூ. 50 ஆயிரம், வௌ்ளி கொலுசு கொள்ளை

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் அருகே உள்ள கடலையூர், முதலியார் தெருவைச் சேர்ந்தவர் வெயில்முத்து. இவருடைய மனைவி சத்யா (55). இவர் நேற்று காலை சுமார் 9:00 மணியளவில் எட்டையாபுரத்தில் வசிக்கும் தனது மகள் சசிகலாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று காலையில் சத்யா தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன் பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் அறையிலிருந்த பீரோவின் கதவும் திறக்கப்பட்டிருந்தது.

பீரோவைச் சோதித்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.50,000 பணம் மற்றும் 2 ஜோடி வெள்ளி கொலுசுகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. சத்யா ஊரில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து சத்யா அளித்த புகாரின் பேரில், நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!