இந்தியக் கால்பந்துக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக, தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஐ.அருமைநாயகத்துக்கு வாழ்நாள் சாதனைக்கான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் குமார் மிஸ்ரா தலைமையிலான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்படி இவ்விருது வழங்கப்படுகிறது. இவர் 1962 ஆசிய போட்டியில் தங்கம் வென்ற இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்றவர் ஆவார்.
