Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜயின் காட்டுமிராண்டி செயலை வன்மையாக கண்டிக்கிறேன்- அப்பாவு

உதயநிதியை காவல்துறை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றபோது அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பிய திமுக தொண்டர்கள் மீது தடியடி நடத்தியும் கைது செய்தும் அராஜகத்தில் ஈடுபட்ட காவல்துறையினரையும் வன்மையாக கண்டிக்கிறேன் என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அப்பாவு தனது எக்ஸ் தளத்தில், “பட்ஜெட் கூட்டத்தொடரில் உதயநிதியின் கேள்விக்கணைகளை சந்திக்க முடியாத அச்சத்தில், உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையும் மீறி காவல்துறையை‌ வைத்து கைது செய்த #விஜயின் காட்டுமிராண்டி செயலை வன்மையாக கண்டிக்கிறேன்!
உதயநிதியை காவல்துறை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றபோது அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பிய திமுக தொண்டர்கள் மீது தடியடி நடத்தியும் கைது செய்தும் அராஜகத்தில் ஈடுபட்ட காவல்துறையினரையும் வன்மையாக கண்டிக்கிறேன்!

உதயநிதியை எங்கே கொண்டு செல்கிறார்கள் என்று யாருக்கும் சொல்லாமல் அவரை தனிமைப்படுத்தி அழைத்து செல்வது அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தை தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது. ஆகவே உயர்நீதிமன்ற #நீதியரசர்கள் தலையிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை இந்த “#கோமாளி ” அரசிடமிருந்து காப்பாற்றித் தர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!