Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அயோத்தி சாமியார் தலையை சீவினால் ரூ.100 கோடி தருகிறேன்….. சீமான் பேட்டி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- முன்னறிவிப்பு செய்து எந்த செயலையும் பாஜக செய்தது கிடையாது. பாரத் என்றாலும், சூரத் என்றாலும் கவலையில்லை – எனக்கு தமிழ்நாடு தான்.  “இந்து என்ற பெயரும் ஆங்கிலேயர் வைத்தது தானே- அதையும் மாற்ற வேண்டியது தானே. ஆட்சிக்கு வந்த உடனேயே பாரத் என பெயர் மாற்றம் செய்திருக்க வேண்டியது தானே? பாரத் என்ற பெயரை எடுத்து விட்டு வேறு பெயரை வைத்து விட்டால் எல்லாம் மாறி விடுமா? ஒரே நாடு என்றால் ஏன் காவிரி நீர் பெற்று தர முடியவில்லை. இன்று பயிர் காய்கிறது, நாளை வயிறு காயும்.

ராமேஷ்வரத்தில் தாமரை, சூரியன் நேரடியாக போட்டியிட்டால் எனது வேட்பாளரை திரும்ப பெறுவேன்.நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசை கூட்டணியில் இருந்து வெளியேற்றுங்கள், நான் முழுமையாக திமுகவுக்கு ஆதரவு தருகிறேன். அயோத்தி சாமியார் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான், உதயநிதியின் தலைக்கு விலை அறிவித்த சாமியாரின் தலையை சீவினால் நான் ரூ.100 கோடி தருகிறேன். தலையை வெட்டு, நாக்கை வெட்டு என்று சொன்னால் அவர் சாமியார் அல்ல, கசாப்பு கடைக்காரர் என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!