Skip to content
Home » ஐஏஎஸ் மெயின் தேர்வு ரிசல்ட்… தமிழ்நாட்டில் 132 பேர் தேர்ச்சி

ஐஏஎஸ் மெயின் தேர்வு ரிசல்ட்… தமிழ்நாட்டில் 132 பேர் தேர்ச்சி

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)நடத்திய ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மெயின் தேர்வு ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் 2844 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 132 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டுக்கான சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 1105 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 1ம் தேதி வெளியிடப்பட்டது. முதல்நிலை தேர்ச்சி பெற்றோருக்கான மெயின் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 15, 16, 17, 23 மற்றும் 24ம் தேதி என 5 நாட்கள் நடந்தது.  இந்தியா முழுவதும் சுமார்  12 ஆயிரம் பேர் எழுதினர்.  மெயின் தேர்வுக்கான ரிசல்ட்டை யுபிஎஸ்சி தனது இணையதளத்தில் நேற்று மாலை வெளியிட்டது.

சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் இந்தியா முழுவதும் இருந்து 2,844 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து 132 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 92 மாணவர்கள் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்றவர்கள். ஒட்டுமொத்தமாக சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் (சென்னை,பெங்களுர், திருவனந்தபுரம் ) 504 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு டில்லியில் நேர்முகத்தேர்வு நடைபெறும். இதற்கான அறிவிப்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும்.

நேர்முக தேர்வு முடிந்த பின்னர் நேர்முக தேர்வு, மெயின் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில்  ரேங்க் முடிவு செய்யப்பட்டு பணி ஒதுக்கப்படும்.அதன் பின்னர் இவர்களுக்கு  பயிற்சி வழங்கப்பட்டு  பணி ஒதுக்கீடு செய்யப்படும்.  அதை தொடர்ந்து அவர்கள் பணியில் சேர்வார்கள்.

தமிழ்நாட்டில் சுமார் 435 பேர் இந்த மெயின் தேர்வு எழுதினர். அதில் 132 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!