Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் உங்கள் நாடே இருக்காது: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால், உங்கள் நாடே இருக்காது என ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது; ஈரான் அதிகாரிகளுடன் இரவு முழுவதும் பேச்சுவார்த்தை நடத்தினேன். முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள கூடாது என ஈரான் அதிகாரிகளிடம் எச்சரித்துள்ளேன்.

அந்த ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்திற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு இடையூறு முயற்சியும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையில் எந்தவொரு முற்றுகையும் ஏற்பட்டால், அமெரிக்கா முழு பலத்துடன் பதிலடி கொடுக்கும். நீங்கள் அதை மூடினால், உங்கள் நாடே இருக்காது. உங்களால் உங்கள் நாசகார நாட்டிற்கே திரும்பிச் செல்லக்கூட முடியாது.

உலகளாவிய கப்பல் போக்குவரத்து வழித்தடத்தைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா நேரடி செயல்பாட்டுக் கட்டுப்பாட்டை ஏற்கக்கூடும். ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் எண்ணெய் சரக்குகளுக்குப் போக்குவரத்துக் கட்டணங்களை விதிக்க வாய்ப்புள்ளது. தேவைப்பட்டால் நாங்கள் இந்த ஜலசந்தியைக் கைப்பற்றுவோம் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!