Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜனநாயகன்’ படத்தை போல்.. ”கருப்பு’ படத்துக்கு நடந்திருமோனு பயமா இருக்கு- தயாரிப்பாளர்கள் பேட்டி

கருப்பு படத்திற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டாக பேட்டியளித்துள்ளனர். 

‘கருப்பு’ திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாகாத நிலையில், மற்ற மாநிலங்களில் அனுமதி இன்றி க்யூப் நிறுவனம் அப்படத்தை வெளியிட்டது தொடர்பாக  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர்கள் சிவா, தாணு, எஸ்.ஆர்.பிரபு, “கருப்பு படத்திற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் அனுமதியின்றி கருப்பு படம் வெளியாகியுள்ளது. தவறு நடந்ததை கியூப் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. ஜனநாயகன் திரைப்படம் போல் கருப்பு படமும் இணையத்தில் கசிய வாய்ப்புள்ளது. நஷ்ட ஈடு கொடுப்பதாக கியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. கியூப் நிறுவன ஊழியரின் தவறால் வடமாநிலங்களில்  கருப்பு திரைப்படம் வெளியானது” என்றனர்.

பண பிரச்சினை காரணமாக சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படத்தின் 9 மணி காட்சி ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், படம் இன்று பிற்பகல் முதல் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் சிக்கல் தீரவில்லை. தயாரிப்பு நிறுவனம் மற்றும் தொடர்புடைய தரப்புகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!