ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் உள்ளூர் அதிகாரிகளின் உத்தரவுகளை பின்பற்ற ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஆபத்து காலங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பான அறைகளில் தங்குமாறும், திடமான தடுப்புகளுக்கு பின்னால் இருக்குமாறும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், உதவிகளுக்கு 911, 998 என்ற அவசர எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் முக்கிய அறிவுரை
