சென்னை, திருவான்மியூரில் இயக்குநர் அமிர்தம் இல்லத் திருமண நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாக மாறி இருக்கிறது என்று விமர்சித்துள்ளார். லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்தி கொண்டு இருக்கிறது. வீட்டுக்கு வீடு, கிராமத்துக்கு கிராமம் பட்டதாரிகள் இருப்பதற்கு திராவிட இயக்கம் தான் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
