தாய்லாந்தில் இருந்து டில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தை ஓட்டிய விமானி கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது கண்டறியப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பூதாகரமானதை தொடர்ந்து, இன்று முதல் நிறுவனத்தின் அனைத்து விமானிகளுக்கும் கட்டாய போதைப்பொருள் பரிசோதனை நடத்த ஏர் இந்தியா நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால், போதைப்பொருள் பயன்படுத்தும் விமானிகள் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
