Skip to content
Home » எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு INDIA என பெயர் வைப்பு….. மும்பையில் 3வது கூட்டம்

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு INDIA என பெயர் வைப்பு….. மும்பையில் 3வது கூட்டம்

  • by Senthil

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்களின்  2வது கூட்டம் பெங்களூருவில் 2 நாட்கள் நடந்தது. இன்று  பிற்பகல் 3.30 மணியுடன் கூட்டம் நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர்  கார்கே, காங்கிரஸ் பிரதமர் பதவிக்காக இந்த கூட்டத்தை நடத்தவில்லை. ஜனநாயகத்தை காக்கவே கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்றார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின்பேசும்போது ஒவ்வொரு மாநிலத்திலும் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும். குறைந்த பட்ச பொது செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றார். அத்துடன் ஒவ்வொரு கூட்டம் நடக்கும்போதும், ஒன்றிய அரசு திமுகவை குறிவைத்து தாக்குகிறது என்றார்.

கூட்டத்தில் மொத்தம் 26 கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டம் வெற்றிகரமாக அமைந்ததாக கூட்டத்தை ஏற்பாடு செய்த கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்  டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைப்பு கூட்டணி(Indian  National Democratic Inclusive Alliance) என பெயர் சூட்டப்பட்டது. இந்த வார்த்தைகளின் முதல் எழுத்துக்களைக்கொண்டு சுருக்கமாக INDIA , இந்தியா  என பெயரிடப்பட்டுள்ளது.

அடுத்த கூட்டம் மும்பையில் நடத்துவது என்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!