சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கித் தவித்த 12 பேரை இந்திய விமானப்படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். வெள்ளம் காரணமாக சாலை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் நீரில் மூழ்கியதால், அங்கு சிக்கியவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் ஒவ்வொருவராக மீட்கப்பட்ட 12 பேரும் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டனர். விமானப்படை வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
வெள்ளத்தில் சிக்கிய 12 பேரை பத்திரமாக மீட்ட இந்திய விமானப்படை
