Skip to content
Home » இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர்…. திராவிட் தொடருவார்….

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர்…. திராவிட் தொடருவார்….

  • by Senthil

இந்திய அணியின் பயிற்சியாளராக 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு அவரை பி.சி.சி.ஐ ஒப்பந்தம் செய்தது. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியோடு ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவி காலம் முடிவடைந்தது. இதனையடுத்து அவரது பதவி காலத்தை நீட்டிக்க பிசிசிஐ விருப்பம் தெரிவித்திருந்தது. ராகுல் டிராவிட்டின் முடிவுக்காக பிசிசிஐ காத்துக் கொண்டிருந்தது. இதற்கிடையே  விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியாளராக  நியமிக்கப்படலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் நியமனத்துக்கு ராகுல் டிராவிட் தற்போது சரி என தெரிவித்துள்ளார்.  எனவே திராவிட்டே  பயிற்சியாளராக தொடருவார்.   இது தொடர்பாக இன்று நடந்த பிசிசிஐ கூட்டத்திலும்  முடிவு எடுக்கப்பட்டது.  திராவிட்டுடன் இருந்த அந்த குழுவினர் அப்படியே தொடருவார்கள் என்றும் பிசிசிஐ அறிவித்தது. இது குறித்து ராகுல் டிராவிட் கூறியதாவது: இந்திய அணியுடன் கடந்த இரண்டு வருடங்கள் மறக்க முடியாதவை. நாங்கள் தோல்வியையும் வெற்றியையும் கண்டிருக்கிறோம். இந்த பயணம் முழுவதும், குழுவிற்குள் இருந்த ஆதரவும் தோழமையும் தனித்துவமானது. டிரஸ்ஸிங் ரூமில் நாங்கள் அமைத்துள்ள கலாச்சாரத்தைப் பற்றி நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். இந்த காலகட்டத்தில் என் மீது நம்பிக்கை வைத்ததற்காகவும், எனது பார்வையை ஆதரித்ததற்காகவும், ஆதரவை வழங்கியதற்காகவும் பிசிசிஐ மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எனது குடும்பத்தின் தியாகங்களையும் ஆதரவையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். உலகக் கோப்பைக்குப் பிறகு நாங்கள் புதிய சவால்களை சந்திக்கும் போது, சிறந்ததைத் தொடர நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!