விமான கடத்தல் முயற்சியை முறியடித்த Real Hero இந்தியாவை சேர்ந்த Pilot ஸ்மித் மச்சார்
நேற்றைய தினம் துபாய் நாட்டில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 174 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் (மொத்தம் 180 பேர்) Flydubai Flight FZ1073 விமானம் புறப்பட்டது.
இந்த விமானத்தில் பயணம் செய்த 180 பேரில் 27 குழந்தைகளும் அடங்குவர்.
இந்த விமானத்தை இயக்கியவர் முதன்மை பைலட்டான இந்தியாவை சேர்ந்த விமானி ஸ்மித் மச்சார்.
இந்த விமானத்தின் துணை பைலட்டாக இருந்தவர் ஓமான் நாட்டை சேர்ந்தவர்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, ஓமன் நாட்டைச் சேர்ந்த உதவி விமானி திடீரென இந்தியாவை சேர்ந்த தலைமை விமானி ஸ்மித்தை கத்தியால் குத்தி, விமானத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தரையில் மோதி விபத்துக்குள்ளாக்க (9/11 பாணியில்) முயன்றார்.
இந்தத் தாக்குதலால் விமானம் வான்வெளியில் சில நிமிடங்களில் சுமார் 16,000 முதல் 18,000 அடி வரை கீழே சரிந்து பயணியரிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியது.
விமானத்தின் கார்பெட்டில் இருந்து சண்டை போடும் சத்தம் வெளியானது திடீரென விமானம் நிலை தடுமாறி தாறுமாறாக இயங்கியது ஆகியவற்றை கண்டு விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அச்சத்தில் அலறினர்.
இதற்கிடையே கத்தியால் குத்தப்பட்ட இந்திய விமானிஸ் ஸ்மித்துக்கு ரத்தம் வழிந்தோடியது
தாக்குதலுக்குள்ளான தலைமை கேப்டன் ஸ்மித் மச்சார் (Smit Machchhar) இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்தவர்.
அவர் ரத்த வெள்ளத்திலும் அந்த உதவி விமானியைத் துணிச்சலாக எதிர்த்துப் போராடியதோடு விமானத்தை கடத்த முயன்ற துணை விமானி விமானத்தை கட்டுப்பாட்டில் எடுக்க விடாமல் தொடர்ந்து தடுத்தார்.
மேலும் விமானம் ஆபத்துக்கு உள்ளாகி இருக்கிறது பிரச்சினையில் இருக்கிறது என்பதை சமிஞ்கை மூலம் விமான கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தார்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த படி உயிரை கையில் பிடித்துக் கொண்டு அந்த துணை விமானிவுடன் போராடியபடியே ஒரு வழியாக சமாளித்து விமானத்தின் Cockpit கதவை இந்தியா விமானி ஸ்மித் திறந்து விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய பயணிகளில் துணிச்சலான பயணிகள் சிலர் மற்றும் விமானத்தில் உதவிக்காக இருந்த மேலும் சில பைலட்டுகள் என ஒமான் நாட்டை சேர்ந்த துணை விமானியின் கழுத்தில் கையை வைத்து இறுக்கி மடக்கி பிடித்து அவரை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இதையடுத்து கடத்தல் தொடர்பான அவசரச் சிக்னல் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, விமானம் உடனடியாக சவூதி அரேபியாவின் தபூக் (Tabuk) விமான நிலையத்தில் பத்திரமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
தாக்குதலில் ஈடுபட்ட உதவி விமானியை சவூதி அரேபிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சர்வதேசப் பாதுகாப்பு முகமைகள் மற்றும் காவல்துறையினர் இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் முயற்சியா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயணிகள் அனைவரும் காயமின்றிப் பாதுகாப்பாக இஸ்ரேல் கொண்டு சேர்க்கப்பட்டனர்.
கத்தி குத்துக்காயம் அடைந்த இந்திய விமானிக்கு உடனடி முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக இந்தியாவில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் அனுபவம் பெற்ற மூத்த விமானியான ஸ்மித் மச்சாரின் இந்த அசாத்திய துணிச்சலையும் வீரத்தையும் இஸ்ரேல் அரசு மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்புகள் வெகுவாகப் பாராட்டியுள்ளன.
அமெரிக்க அதிபர் டாபல்டு ட்ரம்ப் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ பிரதமர் மோதி உட்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்திய விமானி ஸ்மித்துக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய விமானி ஸ்மித் மட்டும் தனது அசாத்திய துணிச்சலை வெளிப்படுத்தி இருக்காமல் விட்டிருந்தால் அந்த துணை விமானி கந்தஹார் விமான கடத்தல் போல விமானத்தை கடத்தி 2001 மாவது ஆண்டில் எப்படி அல்-காய்தா பயங்கரவாதிகளால் விமானம் கடத்தப்பட்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களில் மோதி விபத்துக்கு உள்ளாக்கப்பட்டதோ அதேபோல இதே விமானத்தையும் தலையில் மோதி விபத்தை ஏற்படுத்தி இருப்பார்.
இன்று இஸ்ரேல் உட்பட ஒட்டுமொத்த உலக நாடுகளும் இந்திய விமானி ஸ்மித்தை தங்களின் ஆபத் பாந்தவராக கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.
காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் இந்திய விமானி ஸ்மித் விரைவில் குணமடைய வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றனர்
நேற்றைய தினம் ஒட்டுமொத்த தேசிய ஊடகங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களில் இந்த நிகழ்வைப் பற்றியும் இந்திய விமானி ஸ்மித்தை பற்றியும் தான் பிரதான செய்தி.
180 பேரின் உயிரையும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள விமானங்களையும் காப்பாற்றி போலியான Reels Hero க்களுக்கு மத்தியில் Real Hero வாக மாறியிருக்கிறார் இந்திய விமானி ஸ்மித்.
