கர்நாடகாவில் உள்ள கபினி அணையில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (ஆக.6) காலை 75.64 அடியிலிருந்து 76.18 அடியாக உயர்ந்துள்ளதோடு, அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 19,119 கனஅடியிலிருந்து 19,264 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்வழப்பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
