இன்ஸ்டாகிராம் பெண் பிரபலம் தொகுப்பாளர் முத்துக்குமரன் மீது பாலியல் புகார்
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி உடலுறவு வைத்ததாக குற்றச்சாட்டு
தற்கொலைக்கு தூண்டுதல் மிரட்டிய விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
தன்னுடன் வாழ சம்மதித்தால் தாலி கட்ட வேண்டும் இல்லை என்றால் பத்தாண்டு சிறை செல்ல வேண்டும்- பாதிக்கப்பட்ட பெண்
இன்ஸ்டாகிராம் பிரபலமான பெண் ஒருவர் தொகுப்பாளர் முத்துக்குமரன் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும் தன்னை ஏமாற்றியதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும் அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை

ஏற்படுத்தியது. இது தொடர்பாக முத்துக்குமரன் மறுப்பு தெரிவித்து சம்பந்தப்பட்ட பெண்மீது பொய் கூறுவதாக புகார் அளித்தார்.
இந்த நிலையில் தான் பாதிக்கப்பட்ட பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இன்ஸ்டாகிராம் மூலம் முத்துக்குமரன் பழகியதாகவும் தொடர்ந்து நட்பு வைத்துக் கொண்டு தாலி கட்டுவதாக கூறி திருமண ஆசை காட்டி உடலுறவு வைத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்
அதன் பிறகு திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததாகவும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றது குறித்தும் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்
பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர்களை சந்தித்தபோது…
முத்துக்குமரன் பொய்யாக வாக்குறுதி அளித்து பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார். இவ்வளவு நாளாக அவர்களது பெற்றோரை சந்தித்து பேச நினைத்தேன் ஆனால் அதில் பிரச்சினை தீரவில்லை என்னுடைய பொறுமை இழந்து இறுதியாக புகார் அளித்துள்ளேன்
முத்துக்குமரன் தானாக குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் கடையநல்லூர் விவகாரம் தொடர்பாக ஆதரவாக பேசியதாக கூறினார் இரண்டு பேரும் பேச ஆரம்பித்து இரண்டு முறை சந்தித்து பேசினோம் பொய்யான வாக்குறுதி கொடுத்துவிட்டு உடல் ரீதியாக தொடர்பு வைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். பிறகு தான் திருமணம் செய்து கொள்ள தயாராக இல்லை என தெரிவித்தார். இதனை கேட்டதற்கு தொடர்பை துண்டித்ததாகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்
மருத்துவமனையில் இருக்கும் பொழுது தொடர்பு கொண்டு தற்கொலைக்கும் எனக்கும் தொடர்பில்லை என கூற வேண்டும் என மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விவரம் வெளியில் வந்தால் தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அந்த மனநிலையில் சமாதானமாக செல்ல வில்லை எனவும், இயல்படைந்த பிறகு சகஜமாக பேச நினைத்த போது அவர் பேச மறுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்
இது தொடர்பாக முத்துக்குமரனின் பெற்றோர்களை சந்தித்து கல்லல் குடி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து விட்டு சண்டை போட செல்லவில்லை எனவும் இறுதியாக புகார் அளிப்பதற்கு முன் பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும் தெரிவித்துள்ளார். புகார் அளிக்கும் முன் எங்களை சந்தித்து ஏன் பேசவில்லை என கூறக்கூடாது என்ற அடிப்படையில் சந்தித்து பேசியதாகவும் தெரிவித்துள்ளார்
பெற்றோர்களும் பேசுவதற்கு தயாராக இல்லை எனவும் இதன் காரணமாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார்
முதலில் தனக்கு குற்ற உணர்வுடன் இருப்பதாகவும் எல்லாருடைய பார்வையிலும் அணுகி தான் தான் தவறு செய்ததாகவும் பெண் தான் தவறு செய்ததாகவும் என்று கூறுவதாக குற்ற உணர்வில் நினைத்து விட்டதாக கூறியுள்ளார். தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் இருந்து வெளிவந்த போது முத்துக்குமரன் தவறை உணராமல் இருப்பது என்னை தூண்டி விட்டுள்ளது
அதன் காரணமாக நீதி கிடைக்க நான் போராட வேண்டும் என்பதற்கு காரணமாக அமைந்தது.
முத்துக்குமரன் கொடுத்த புகார் தொடர்பாக தன்னை யாரும் அணுகவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கடையநல்லூர் பிரச்சனை விவகாரம் தொடர்பாக இன்ஸ்டாகிராம் மூலம் ஆதரவு தெரிவிப்பதாக முத்துக்குமார் தொடர்பு கொண்டதாக கூறியுள்ளார். முத்துக்குமரன் தானாக குறுஞ்செய்தி அனுப்பி சந்திப்புகளை ஏற்பாடு செய்ததாக தெரிவித்துள்ளார். முதல் இரண்டு முறை சாதாரணமாக சந்தித்ததாகவும் அதன் பிறகு தன்னை பிடித்ததாக கூறி தாலி உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக பேசியதாக தெரிவித்துள்ளார்
தொடர்ந்து சந்திப்பு நிகழ்ந்த போது பொய்யான வாக்குறுதி அளித்து காதல் எனக்கூறி பேசியதாகவும், மது ஊற்றிக் கொடுத்ததாகவும் அவரை நம்பியதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து குடிக்க வற்புறுத்தியதாகவும் உடல் ரீதியாக தொடர்ந்து உறவு கொள்ள விருப்பமில்லை என தெரிவித்தாலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக தெரிவித்துள்ளார்.
சேர்ந்து வாழணும் என முத்துக்குமரன் கூறினால் அதற்கு சரி என்றும் ,தாலி கட்ட வேண்டும் என்றும் எதை சொல்லி வாக்குறுதி கொடுத்து உடல் உறவு வைத்துக் கொண்டாரோ அதை கொடுத்து தான் ஆக வேண்டும் அதைக் கொடுக்க மறுத்தால் பத்து வருடம் கம்பி எண்ண வேண்டும்
இதுகுறித்து அவரது வழக்கறிஞர் பிரியதர்ஷினி தெரிவிக்கும் பொழுது
சட்டப்படி அனுமதியுடன் உடலுறவு கொண்டால் அது கற்பழிப்பு கிடையாது எனவும், வாக்குறுதி அளித்து உடலுறவு கொண்டு ஏமாற்றியதாக அடிப்படையில் போவதாக தெரிவித்துள்ளார் இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்றதாகவும், இரண்டு நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். இது தற்கொலைக்கு தூண்டிய விவகாரம் என்ற அடிப்படையிலும் மோசடி என்ற அடிப்படையிலும் வந்து விடும் என தெரிவித்துள்ளார்.
அவரது கால் அழைப்புகள் அனைத்தையும் தெரிவித்துள்ளதாகவும் அவரது உறவினர் சமாதானத்தில் பேசியதாகவும் கூறியுள்ளார். மருத்துவமனை பில் தொடர்பாக கேட்டு சமாதானமாக பேசி வந்ததாகவும் கூறினார். அக்டோபர் ஐந்தாம் தேதி மட்டுமே நேரடியாக பேசியதாகவும் அதன் பின்பு சமாதானம் பேசவே இருந்ததாகவும் கூறியுள்ளார். பெற்றோர்கள் அலட்சியப்படுத்தி அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும், தற்கொலைக்கு தூண்டிய விவகாரம் தொடர்பாகவும், மோசடி மற்றும் மிரட்டல் தொடர்பாக புகார் அளித்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்
தொடர்ந்து இந்த புகாரை மதுரவாயில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு மாற்றியதாக தெரிவித்துள்ளார்.
