Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கலைஞர் நூற்றாண்டு விழா….. முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பிதழ்

கலைஞர் நூற்றாண்டு விழா’ வரும் 6 ம் தேதி நடைபெற உள்ளது .  தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் விதமாக ‘கலைஞர் 100 விழா’ பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது. அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மாதம் 24 ம் தேதி ‘கலைஞர் 100 விழா’ நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட ‘கலைஞர் 100 விழா’ வரும் 6 ம் தேதி  மாலை நடைபெற உள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.  இந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . இயக்குனர் லிங்குசாமி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமநாராயணன், பொதுச் செயலாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் உள்ளிட்டோர் அழைப்பிதழை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!