Skip to content
Home » ஐபிஎல் எலிமினேட்டர்……ராஜஸ்தான்- பெங்களூரு இன்று மல்லுகட்டுகிறது

ஐபிஎல் எலிமினேட்டர்……ராஜஸ்தான்- பெங்களூரு இன்று மல்லுகட்டுகிறது

 ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு கட்டத்தில் லீக்சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்யும் சூழ்நிலையில் இருந்தது. ஆனால் தொடர்ச்சியான 4 தோல்விகள் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டம் மழை காரணமாக ரத்தானது ஆகியவற்றால் லீக் சுற்றில் 3-வது இடத்தை பிடித்தது. மறுபுறம் டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லீக் சுற்றின் முதல் 8 ஆட்டங்களில் 7-ல் தோல்வி அடைந்த நிலையில் அதன் பின்னர் போராட்ட குணத்துடன் செயல்பட்டு கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெளியேற்றி பிளே ஆஃப் சுற்றில் கடைசிஅணியாக கால்பதித்தது.

அணியின் ஒட்டுமொத்த பேட்டிங்கும் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோரை மட்டுமே பெரிதும் சார்ந்திருப்பது பலவீனமாகி உள்ளது. முதல் 7 ஆட்டங்களில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை அணிக்கு எதிராக சதம் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் அதன் பின்னர் அவரிடம் இருந்து பெரியஅளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை. கடந்த சில ஆட்டங்களில் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோரும் மட்டை வீச்சில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த தவறியதால் தொடர்ச்சியான தோல்விகளை தடுக்க முடியாமல் போனது.

இன்றைய ஆட்டம் முக்கியவத்துவம் வாய்ந்தது என்பதால் இவர்கள் 3 பேரும் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும். பின் வரிசையில் ஷிம்ரன் ஹெட்மயர், ரோவ்மன் பொவல் ஆகியோரும் பொறுப்புடன் செயல்பட்டால் அணியின் பலம் அதிகரிக்கும். இன்றையபோட்டி நடைபெறும் நரேந்திரமோடி மைதானம் மற்றஆடுகளங்களை போன்றுரன் குவிப்புக்கு மட்டுமேசாதகமாக இருக்காது, பந்துவீச்சுக்கும் கைகொடுக்கும். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ்அணியின் பந்து வீச்சு துறை துடிப்புடன் செயல்படும் பட்சத்தில் பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் தரக்கூடும்.

பெங்களூரு அணியின் பேட்டிங்கில் விராட் கோலி ரன் இயந்திரமாக திகழ்ந்து வருகிறார். நடப்பு சீசனில் 14 ஆட்டங்களில் ஒரு சதம், 5 அரைசதம் என 708 ரன்கள் வேட்டையாடி உள்ள அவரிடம் இருந்து மேலும் சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். டு பிளெஸ்ஸிஸும் பார்முக்கு திரும்பி இருப்பது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. நடுவரிசையில் 5 அரை சதங்களுடன் 361 ரன்கள் சேர்த்துள்ள ரஜத் பட்டிதார், கேமரூன் கிரீன் ஆகியோரும் பின் வரிசையில் தினேஷ் கார்த்திக்கும் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!