Skip to content
Home » இந்தியாவில் தான் போட்டி……தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் ஐபிஎல் அட்டவணை…..

இந்தியாவில் தான் போட்டி……தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் ஐபிஎல் அட்டவணை…..

  • by Senthil

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கி மே 26-ம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் பொதுத் தேர்தல்களுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே வரவிருக்கும் சீசனுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிகிறது.

தேர்தல்கள் இருந்தாலும் ஐபிஎல் போட்டிகள் முழுதும் இந்தியாவிலேயே நடைபெறும் என்றுதான் தெரிகிறது. இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பிசிசிஐ நிர்வாகி கூறியதாக வெளியான செய்தியில், “ ஐபிஎல் அட்டவணை தயாரிப்பு பற்றி விவாதித்தோம். பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதிகள் குறித்து உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து தகவலுக்காகக் காத்திருப்பது தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. தேர்தல்கள் ஐபிஎல் நேரத்தில் வரக்கூடும்.

“ போட்டிகள் இந்திய மைதானங்களில்தான் நடைபெறும் .இது பற்றி எந்த கேள்வியும் இல்லை. வேறு நாட்டுக்கு மாற்றுவது என்ற யோசனையும் இல்லை. வாக்குப்பதிவுத் தேதிகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். ஏனெனில் அதன் அடிப்படையில் பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து, அங்கிருந்து அதை முன்னெடுத்துச் செல்வோம். முழுப் போட்டியையும் இந்தியாவில் நடத்துவதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடனும் விரைவில் பேச்சு வார்த்தை நடத்துவோம்” என்றார்.

டாடா குழுமம் ஐபிஎல் தலைமை ஸ்பான்சர்ஷிப் உரிமையை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. பெண்கள் பிரீமியர் லீக்கின் தலைமை ஸ்பான்சர்ஷிப் உரிமைகளையும் டாடா குழுமமே வைத்துள்ளது.

மகளிர் பிரிமியர் லீக் டி20 போட்டிகளுக்கான தேதி இன்னும் சில நாட்களில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. மகளிர் பிரிமியர் லீக் பிப்ரவரி 22 முதல் மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் பெங்களூரு, டில்லி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.மகளிர் பிரிமியர் லீக் டி20 தொடரின் கடந்த ஆண்டு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2023 சீசனில் டாப் பேட்டர் ஷுப்மன் கில் 17 போட்டிகளில் 890 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பிக்குச் சொந்தக்காரர் ஆனார். அதே போல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக பர்ப்பிள் கேப் பெற்றார் பவுலரும் குஜராத் டைட்டன்சின் முகமது ஷமி. இவர் 17 போட்டிகளில் 28 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!