திண்டுக்கல் நகரில் உள்ள 15 ரேஷன் கடைகளில் பறக்கும் படை குழுவினர் திடீர் ஆய்வு நடத்தினர். இதில், கோவிந்தராஜ் நகர், பாலகிருஷ்ணாபுரம், நாயக்கர்புதுத்தெரு, கருணாநிதி நகர் ஆகிய நான்கு ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் கையிருப்பு விவரங்களில் குளறுபடி செய்து, பொருட்களை விற்று முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதனால், ரூ.36,400 கையிருப்பு குறைந்த நிலையில், சம்பந்தப்பட்ட நான்கு விற்பனையாளர்களுக்கும் ரூ.49,575 அபராதம் விதிக்கப்பட்டு, அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிறப்பித்துள்ளார்.
