மாதம் ரூ.2,500 என்று கூறிவிட்டு, ரூ.1,000 கூட தராமல் இழுத்தடிப்பதுதான் மாற்றமா என முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தனது X பதிவில், மே மாதத்துக்கான மகளிர் உரிமை தொகையை 15-ம் தேதி வரவு வைக்க வேண்டும் என்றார். திமுக அரசின் நலத்திட்டங்கள் தொடரும் என்று நேற்றுதானே பேரவையில் சொன்னீர்கள்? ஏற்கெனெவே உள்ள திட்டத்தை தொடர என்ன மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனவும் கேள்விகளை அடுக்கினார்.
