Skip to content
Home » இஸ்ரேலில் இருந்து கோவை வந்தடைந்த 4 பேர்.. அமைச்சர்-கலெக்டர் வரவேற்பு…

இஸ்ரேலில் இருந்து கோவை வந்தடைந்த 4 பேர்.. அமைச்சர்-கலெக்டர் வரவேற்பு…

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நடைபெற்று வரும் நிலையில் அங்கிருக்கும் இந்தியர்களை மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகள் அழைத்து வரும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தமிழக அரசும் மத்திய அரசுடன் இணைந்து அங்கிருக்கும் தமிழர்களை அழைத்து வருகின்றது.

அதன்படி இன்று கோவை விமான நிலையத்திற்கு 4 பேர் அழைத்து வரபட்டனர். அவர்களை தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், அங்கிருந்து இதுவரை தமிழகத்திற்கு 132 பேர் அழைத்து வரப்பட்டுள்ளார்கள் என தெரிவித்தார். இன்றைய தினம் கோவைக்கு 4 பேர் வந்தடைந்துள்ள நிலையில் கோவை விமான நிலையத்திற்கு மட்டும் மொத்தம் 25 வந்தடைந்துள்ளார்கள் என்றார். மேலும் அங்கிருந்து தொடர்பு கொள்பவர்களை அழைத்து வந்து அவர்களது இல்லம் வரையிலும் கொண்டு போய் சேர்க்கின்ற பணியை முதலமைச்சரின் உத்தரவின்படி துறை சார்ந்த அதிகாரிகளும் நானும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அவர்களை வரவேற்று அவர்களை இல்லத்தில் கொண்டு சேர்க்கின்ற பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். சிலரை நாங்கள் தொடர்பு கொள்ளும் பொழுது பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார்கள் எனவும் பிற நாட்டவர்கள் எங்களுடன் இருந்து அவர்களின் நாட்டிற்கு செல்லும் பொழுது எங்களுக்கும் அச்சம் ஏற்படுவதாகவும் தேவைப்பட்டால் தொடர்பு கொள்கிறோம் என அங்கிருப்பவர்கள்

தெரிவித்ததாக அமைச்சர் கூறினார். தமிழக அரசாங்கத்தின் சார்பில் 120 பேருக்கு விமான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் 12 பேர் சொந்த செலவில் திரும்பி உள்ளதாகவும் கூறினார். மேலும் அங்கு இருப்பவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தான் நாம் அவர்களை அழைப்பதாகவும் அவர்களை தொடர்பு கொள்வதற்காக தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் மேலும் இங்கிருக்க கூடிய உறவினர்கள் தேவைப்படுகின்ற பட்சத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ள தொலைப்பேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதுவரை தமிழ்நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு செல்பவர்களின் விவரம் பெரும்பாலும் பதிவில்லாமல் இருப்பதாக தெரிவித்த அவர் அதனால் தான் அயலக தமிழக வாரியத்தை வைத்து பதிவு செய்து செல்லும் நிலையை உருவாக்கியுள்ளதாக கூறினார். எனவே இனிவரும் காலங்களில் தான் தமிழகத்தை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் எத்தனை பேர் உள்ளார்கள் என்ற விவரங்களை அறியக்கூடும் என தெரிவித்தார்.

பின்னர் அங்கிருந்து திரும்பிய வசீம் என்ற மாணவர் கூறுகையில், தங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்பட்டது என கூறினார். வெளிநாடு தமிழர்கள் அமைப்புகள் தங்களை பத்திரமாக அழைத்து வந்ததாக கூறினார். அங்கு தற்போதும் தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருப்பதாகவும் இனிமேல் தான் தங்களுக்கு பிரச்சனை

வரும் என எண்ணம் தோன்றியதாக தெரிவித்த வசீம் அதனால் தான் அங்கிருந்து கிளம்பி விட்டதாக கூறினார். நாளுக்கு நாள் பிரச்சினை அதிகரித்து கொண்டே செல்வதாக இருந்ததால் கிளம்ப வேண்டிய தேவை உருவானதாகவும் அதனால் இங்கு திரும்பியதாக தெரிவித்தார். அங்கு ஒவ்வொரு இடத்திற்கும் உள்ள பாதுகாப்பு அறிகுறிகள் மாறும் எனவும் தெரிவித்தார். நாங்கள் அங்கு விமான நிலையத்தில் இருக்கும் போதும் மிசேல் வெடித்ததாகவும் உடனடியாக நாங்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டதாகவும் கூறினார். பதற்றமான சூழல் இஸ்ரேல் சைடில் இல்லை பாலஸ்தீனம் சைடு இருக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!