தெற்கு பிலிப்பைன்ஸின் மின்டானோ பிராந்தியத்தில் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்ததோடு, 4 பேர் காயம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மின்டானோ பகுதியில் இருந்து 35 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பலாவ், தைவான் மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளின் கடற்கரைகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சுனாமி ஏற்படக்கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கையை விடுத்தது.
இதற்கிடையில் பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தற்போது மீட்பு பணிகள் முழுவீச்சில் நடக்கிறது.
இந்தத் தாக்குதல் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, “ஈரான் மீது பதிலடித் தாக்குதல் நடத்த வேண்டாம், அமைதி காக்கவும்” என்று வலியுறுத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் டிரம்ப் பேச்சினை மீறி இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்கா – ஈரான் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
