உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகரில் உள்ள பயிற்சி மையத்தில், மாணவி ஒருவரிடம் ஆசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மையத்தை முற்றுகையிட்டுப் புகார் அளித்தபோது, ஆத்திரமடைந்த அம்மாணவி சக ஆசிரியர்கள் முன்பே தனது காலணியைக் கழற்றி ஆசிரியரைச் சரமாரியாக அடித்தார். இந்த 19 விநாடி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், மாணவியின் துணிச்சலான செயலுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
