Skip to content
Home » காசாவை ஆக்கிரமிக்க கூடாது.. இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை…

காசாவை ஆக்கிரமிக்க கூடாது.. இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை…

கடந்த 1967-ம் ஆண்டுக்கு முன்பு, பாலஸ்தீனத்தின் காசா பகுதி எகிப்தின்கட்டுப்பாட்டில் இருந்தது. 1967-ம் ஆண்டில்6 நாட்கள் நடந்த போரில், எகிப்திடம் இருந்து காசா பகுதியை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, கடந்த 2005-ம் ஆண்டு வரை இஸ்ரேல் நிர்வாகத்தின்கீழ் காசா இருந்தது. அதன்பிறகு, பாலஸ்தீனத்திடம் ஒப்படைத்துவிட்டு இஸ்ரேல் ராணுவம் வெளியேறியது. தற்போது காசா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, வடக்கு காசா பகுதியில் தரை வழியாக நுழைய இஸ்ரேல் வீரர்கள் தயாராகி வருகின்றனர். இதனால், காசா பகுதியை இஸ்ரேல் மீண்டும் ஆக்கிரமிக்கும் என்று முஸ்லிம் நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது… காசா பகுதியில் உணவு, குடிநீர், மின்சாரம், எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகிஉள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது.  பாலஸ்தீனத்தின் காசா பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமிக்க கூடாது. இது மாபெரும் தவறாகிவிடும். இஸ்ரேலில் கொடூர தாக்குதல்களை நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும். அதேநேரம் பாலஸ்தீன மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது இவ்வாறு அவர் கூறினார். ஹமாஸ் தீவிரவாதிகள் – இஸ்ரேல் இடையிலான போர், மத்திய கிழக்கின் இதர பகுதிகளுக்கு பரவிவிட கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன் பல்வேறு முஸ்லிம் நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதேபோல் லெபனான், சிரியா, கத்தார், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை சந்தித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமீர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இப்படியான பரபரப்பான சூழ்நிலையில் மத்திய கிழக்கில் முஸ்லிம் நாடுகளை அமைதிப்படுத்தவே, இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!