Skip to content
Home » இஸ்ரேல் உளவு அமைப்பு மீது ஈரான் தாக்குதல்….. பதற்றம் அதிகரிப்பு

இஸ்ரேல் உளவு அமைப்பு மீது ஈரான் தாக்குதல்….. பதற்றம் அதிகரிப்பு

ஈராக் மற்றும் சிரியாவில் பயங்கரவாதிகள் இருக்கும் பல்வேறு இடங்களை குறிவைத்து ஈரான் பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் வீசிய ஏவுகணைகள், ஈராக் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல் உளவுத் துறை அலுவலகம் மீதும் பாய்ந்தன. இந்த தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் குர்திஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்திருக்கிறது.

பிரபல தொழிலதிபர் பெஷ்ரா டிசாயீயும் கொல்லப்பட்டுள்ளார். குர்திஸ்தானின் அர்பில் நகரில் ஈரான் எதிர்ப்பு பயங்கரவாத குழுக்கள் மற்றும் உளவுத்துறை தலைமை அலுவலகத்தை அழித்ததாக ஈரான் பாதுகாப்பு படை கூறியிருக்கிறது. ஈரானின் தெற்கு நகரங்களான கெர்மன் மற்றும் ராஸ்கில் தாக்குதல் நடத்தி, ஈரானியர்களை கொன்றதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

உலகையே அலறவிடும் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பது பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. ஈரான் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, இது பொறுப்பற்ற செயல் என்று கூறியிருக்கிறது. மேலும், கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!