Skip to content
Home » டாக்டர், நர்ஸ் வேடத்தில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்த இஸ்ரேல்.. ஹமாஸ் முக்கிய தளபதிகளை சுட்டுக்கொன்றது…

டாக்டர், நர்ஸ் வேடத்தில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்த இஸ்ரேல்.. ஹமாஸ் முக்கிய தளபதிகளை சுட்டுக்கொன்றது…

இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையேயான போர் 3 மாதங்களுக்கு மேல் நீடித்து வருகிறது. இந்நிலையில், மேற்குகரையின் ஜெனின் நகரில் உள்ள இபென் சினா மருத்துவமனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதாக இஸ்ரேல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, டாக்டர், நர்சு, நோயாளி என வேடமணிந்த இஸ்ரேல் சிறப்பு படையினர் அதிரடியாக மருத்துவமனைக்குள் நுழைந்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஹமாஸ் ஆயுதக்குழுவின் தளபதி முகமது ஜலாம்நிஹ், பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழுவை சேர்ந்த பசில் அய்மென் அல் குவாசி,  முகமது ஆகிய 3 பேரையும் மாறுவேடத்தில் வந்த இஸ்ரேல் சிறப்புப்படையினர் சுட்டுவீழ்த்தினர். இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இஸ்ரேல் படையின் அதிரடி நடவடிக்கை தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!