Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுகவுடன் கூட்டணி வைக்க சொன்னதே சி.வி.சண்முகம், வேலுமணிதான்”

திமுகவுடன் கூட்டணி வைக்க சொன்னதே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தான் என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “திமுகவுடன் கூட்டணி வைக்க சொன்னதே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தான். நாங்கள் திமுகவுடன் பேசிவிட்டோம் என சொன்னவர்தான் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி. எடப்பாடியார் தன்னிச்சையாக வேட்பாளர்களை தேர்வு செய்யவில்லை. மாவட்ட செயலாளர்கள் யார்யாரை பரிந்துரை செய்தார்களோ அவர்களை தான் வேட்பாளர்களாக எடப்பாடி பழனிசாமி நிறுத்தினார்; அதிமுகவின் தோல்விக்கு மாவட்ட செயலாளர்கள்தான் பொறுப்பு. தேர்தல் தோல்விக்கு வேட்பாளர்கள் காரணமல்ல… அமைச்சர்களாக இருந்த குறுநில மன்னர்களே காரணம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தனக்கென்று தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது என்று சொல்லிக்கொள்ளும் நத்தம் விஸ்வநாதன், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைத்த போதும் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு ஏன் தோல்வியுற்றார்? அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது எஸ்.பி.வேலுமணி தரப்பு தவறான குற்றச்சாட்டை வைக்கின்றனர். எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பரிந்துரைத்தவர்களே அந்தந்த மாவட்டங்களில் வேட்பாளர்கள். எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பரிந்துரைத்த வேட்பாளர்கள் தோல்விக்கு யார் காரணம்? வாய் போன போக்கில் இபிஎஸ் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்துவதா?” எனக் கேள்வி எழுப்பினார்.

error: Content is protected !!